கிரீன் பீல்ட் பாலத்தில் தொடரும் விபத்துக்கள் - உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

எஸ்.அஷ்ரப்கான்


சுனாமியில் முற்றாக பாதிக்கப்பட்ட கல்முனை மக்களை மீள்குடியேற்ற உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் முன்னால் உள்ள பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து வெளியிடுகையில்,

பல வருடங்களாக சேதமாகி பாவனைக்கு உதவாத வகையில் இருக்கின்ற இந்த பாலத்தை புனரமைப்பது தொடர்பில் அரச உயரதிகாரிகள் பிராந்திய அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பல நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பாவிக்கும் இந்த பாலமே கிரீன் பீல்ட் மக்களையும் ஏனைய ஊரையும் இணைக்கும் பாதையாக உள்ளது. இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. 

அரசியல் காரணங்களுக்காக இந்த பாலம் இதுவரை சீர் செய்யபடவில்லை என்றும் உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து தருமாறும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments: