நாடு திரும்பிய இலங்கையர்கள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 22 விமானங்கள் ஊடாக ஆயிரத்து 46 பேர் பயணித்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த பயண நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 615 பேர் 13 விமானங்களினூடாக இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, கட்டாரிலிருந்து 173 பேரும், டுபாயிலிருந்து 135 பேரும், அபுதாபியிலிருந்து 75 பேரும், மலேசியாவிலிருந்து 65 பேரும், சிங்கப்பூரிலிருந்து 57 பேரும், இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: