ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


நாட்டில் இதுவரை 118,767 AstraZeneca Covishield தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் தொற்றுடன் கூடிய நிலைமை சுகாதாரப் பிரிவினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


No comments: