பாடசாலை மாணவனுக்கு கொரோனா;75 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் சுயதனிமைப்படுத்தலில்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ ஹோலிரோஸ்வரி மகாவித்தியாலயத்தின் மாணவன் உட்பட பொகவந்தலாவ பகுதியில் இன்று (9) 6 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகதார பரிசோதகர் ஜெய்கனேஸ் தெரிவித்தார் .

இன்று விடியற்காலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக  இந்த ஆறு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .

இதேவேளை பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் இனங்கானப்பட்ட நான்கு தொற்றாளர்கள்  கடந்த வாரம் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபரின் குடும்பத்தோடு தொடர்பினை பேணிவந்தவர்கள் எனவும் ஏனைய இரண்டு பேரும் கொழும்பு கொள்ளுபிட்டிய பகுதியில் தொழில்புரிந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,பொகவந்தலாவ ஹோலிரோசஸ்வரி மகாவித்தியாலயத்தில் தரம்.11பி பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவனோடு தொடர்புகளை பேணிவந்த 75 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களில் மூன்று ஆண்கள் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரையும் பொகவந்தலாவ மோரா தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ கொரோனா சிகிச்சை நிலையத்திற்கும் இரண்டு பெண்களை வலப்பனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கும் சுகாதார முறைமையோடு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: