களுத்துறை மாவட்டத்தில் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


களுத்துறை மாவட்டத்தின் இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை 818 வேயங்கல்ல கிழக்கு மற்றும் 818 A வேயங்கல்ல மேற்கு ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து  உடன் அமுலுக்கு வரும் வகையில்  விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவும் அச்ச நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசங்கள் சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments