அனைத்து வகுப்புக்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் மார்ச் 15 முதல் ஆரம்பம் - கல்வி அமைச்சர்


நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் சகல வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளை மார்ச் மாதம்  15ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வவி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரையில் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 15ம் திகதி முதல் சுகாதார தரப்பினரின் அனுமதியின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: