கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 பேர் பலி


கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வாகன விபத்துக்களில் 7 விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் 9 பேர் அதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மற்றைய 5 பேரும் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் 4 பேர் மிதிவண்டியில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: