தேங்காய் விற்பனை தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை


தேங்காய்களை, சுற்றளவின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுக் குழுவினால், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தேங்காய்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்வடைந்துள்ளதாகவும், கேள்விக்கு ஏற்ப தேங்காய்களை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: