இந்தோனீசியாவில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் மாயம்
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும்,கிளம்பிய சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: