கொரோனா தொற்று - நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 848 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 844 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய  4 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  63,293 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 879 பேர் குணமடைந்து   நேற்று  வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,277 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 6,703 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டு பேர்  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது,


No comments: