நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் மேலும் 724 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,587 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,261 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 8046 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: