கிழக்கின் கொவிட் தொற்று நிலவரம் (விபரம் உள்ளே)கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் மாலை 4.00 மணிவரை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் மற்றும் என்டிஜன்ட் பரிசோதனைகளின் படி தொற்றாளர்களின் எண்ணிக்கை 1275 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் குறிப்பிட்டார்

கடந்த 12 மணித்தியாலத்தில் 41 பேர் கிழக்கில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கிண்ணியா 1,திருகோணமலை 17,கல்முனை தெற்கு 4, சாய்ந்தமருது 3,அக்கரைப்பற்று 1,ஓட்டமாவடி 1,மட்டக்களப்பு 2, காத்தான்குடி 6 களுவாஞ்சிக்குடி 4, உகன 2 என (41) தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாக

திருகோணமலை மாவட்டம் 165 நபர்களும் ,மட்டக்களப்பு 239 நபர்களும் ,அம்பாறை பிராந்தியம் 33 நபர்களும் ,கல்முனை 838 நபர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் கல்முனை நகர் பகுதி, மட்டக்களப்பு களுவாஞ்சிக்கடி,திருகோணமலை நகர் பகுதியில் மூன்று கிராம சேவக பிரிவுகள் தொடர்ந்து தனைிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

No comments: