ஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை
செல்வி.வினாயகமூர்த்தி
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து கூட்டாக விசேட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
இன்று அதிகாலை முதல் இப்பகுதியில் 50 மேற்பட்ட இராணுவத்தினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன்
இன்று காலை 6 மணிமுதல் திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து இராணுவத்தினர் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களை கேட்டறிந்ததுடன் தகவல் சேகரிக்கப்பட்டடு தகவல்கள் பெறப்பட்டவர்களிடமிருந்து ஒப்பங்களும் பெறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை மேலிட உத்தரவின் பேரில் சோதனை செய்வதாகவும் வேற்று நபர்கள் யாராவது உள்ளனரா? எனவும் தேடிவருவதாகவும் இப்பிரதேசவாதி இராணுவத்தினரின் சோதனை தொடர்பில் வினவியபோது தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை அதிகாலையில் இடம்பெற்ற இவ் திடீர் சோதனை தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரியவருகிறது.
No comments: