மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ மேற்பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் இன்று (08.01.2021) உயிரிழந்துள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி தனது வீட்டுத் தோட்டத்தில் பன்றிக்கு வலை வைப்பதற்கு முயற்சித்த நிலையில், கவனயீனத்தினால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த மரண விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சம்பவ இடத்துக்கு வருகைத்தர உள்ளதாகவும், அவர் வரும்வரையில் உயிரிழந்தவரின் சடலம் அவரது வீட்டுத் தோட்டத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: