கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று நீர்விநியோகத்தடை அமுல்


கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு - 1,2,3,7,8,9,10,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.00 மணிமுதல் நாளை காலை 9.00 மணிவரையான 24 மணிநேரப் பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாக இந்த நீர்விநயோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: