நாட்டை மூடி வீட்டில் இருக்க முடியாது - விவசாயத்துறை அமைச்சர்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
நாட்டில் ஏற்பட்டு கொரோனா தொற்று காரணமாக நாட்டை மூடி வீட்டில் இருக்க
முடியாது.நாம் அனைவரும் சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைய வாழ்வதற்கு
தயாராகிக்கொள்ள வேண்டுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
தெரிவித்தார்.
இன்று (09.01.2021) நாவலப்பிட்டி பகுதியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த கொரோனா வைரசுக்கு நாம் அனைவரும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றோடு பாடசாலைகளை திறக்க வேண்டும். கொரோனா தொற்று தொடர்பிலான சட்டத்திட்டங்களோடு நாம் இதனை மேற்கொள்ள வேண்டும்.
எமக்கு வேலை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எமக்கு வேலை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் திறக்கவேண்டியுள்ளது. தொற்றாளர்கள் அதிகரிப்பார்கள் அவர்கள் பிறகு
குணமடைவார்கள் இதன் அனைத்திற்கும் முகம் கொடுத்து வாழவேண்டியுள்ளது. இந்த
சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டா.ர்
குணமடைவார்கள் இதன் அனைத்திற்கும் முகம் கொடுத்து வாழவேண்டியுள்ளது. இந்த
சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டா.ர்
No comments: