ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேகநபர்கள் இருவர் பேர் கைது


தெமட்டக்கொட பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, தெமட்டக்கொட பகுதியில் நிறுத்திவைக்க்பட்டிருந்த லொரி ஒன்றில் இருந்து 1259 கிலோகிராம் நிறையுடைய மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மஞ்சள் தொகையுடன், லொரியை கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments: