கழிவுப் பொருட்களைக் கொண்டு மின்சார உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை - டலஸ் அழகப்பெரும


கழிவுப் பொருட்களைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மின் உற்பத்தி நிலையம் எனும் அடிப்படையில் இவற்றை அமைக்கவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த மாவட்டங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, குறித்த மின்உற்பத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கமைய முதலாவது மின் உற்பத்தி நிலையம் கம்பஹா மாவட்டத்தின் ஹெந்தல பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக மின்சன்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 700 டொன் கழிவுகளைப் பயன்படுத்தி 10 மெகாவோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சுற்றுச் சூழலுக்கு மிக முக்கிய சவாலாக மாறியுள்ள கழிவுகளை, பொருளாதாரத்தை வளப்படுத்தும் காரணியாக மாற்ற இந்த செயற்றிட்டம் உதவியாக இருக்கும் என மின்சன்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: