தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள்


நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 100 ஆவது தோட்டம், பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 90 ஆவது தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்அன்ட்ரூஸ் கீழ் ஒழுங்கை, சென் அன்ட்ரூஸ் மேல் ஒழுங்கை மற்றும் அன்ட்ரூஸ் வீதி ஆகியனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

நாளை காலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: