கல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது

எஸ்.அஷ்ரப்கான்


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிப்பு  நேற்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களிலும் சுமார் 3445 குடும்பங்களுக்கு இந் நிவாரண விநியோகம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர். வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர்,ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.எம்.சர்ஜுன்,எம்,ஐ.எம்.ஜிப்ரி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.சித்தீக் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments: