இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்


பிரித்தானியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட அதிக வீரியம் கொண்ட  உருமாற்ற கொரோனா வைரஸ் தொற்றுறுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து வருகைத் தந்த ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: