சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்


பொது மக்களின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற மறந்துவிட்டார்கள் என அச்சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இது மிகவும் பரிதாபகரமான சூழ்நிலை என்றும் சுகாதார அதிகாரிகளான இந்த நிலமையாக் காணும்போது மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் பின்னல் சென்று சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கச் சொல்ல முடியாது என்றும் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே தற்போதைய ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: