வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


நாட்டின் சில பகுதிகளில்  100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்று கண்டி மாவட்டங்களிலும் இவ்வாறு 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: