ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது  வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அமைப்பாளர்களின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இன்று ஆரம்பமாகவுள்ள செயலமர்வுகள், அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த செயலமர்வுகளில் கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் முதலாம் கட்ட  செயலமர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 32 தேர்தல் தொகுதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: