அம்பாறை - சாகாமக் குளம் பகுதிக்கு உள்நுளையத் தடை ! (இதுவரை சென்றவர்களிடம் பீ.சீ.ஆர் மாதிரிகள் பெற தீர்மானம்)


அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சாகாமக் குளம் பகுதிக்கு உள் நுளைவது திருக்கோவிட் கொவிட் 19 தடுப்பு செயலணியினால்  இன்று தடை செய்யப்பட்டது. 

கடந்த சில தினங்களாக  சாகாமக் குளம் பகுதிக்கு   சுற்றுலா நிமித்தம்  அதிகளவான மக்கள்  வருகை தந்துள்ளதால் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பகுதியினை மறு அறிவித்தல் வரை மக்கள் உள்நுளைய தடை வித்துள்ளதாக திருக்கோவில் பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணி குறிப்பிட்டுள்ளது .

இதுவரைகாலமும் குறித்த பகுதிக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்தவர்களை இனங்கண்டு குறித்த நபர்களிடம் பீ.சீ.ஆர் மாதிரிகளை பெற தீர்மானித்துள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுளைவது குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மீறி உள்நுளைபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் திருக்கோவில்  பிரதேச செயலக செயலாளர் , இராணுவத்தினர், பொலிஸார்,  , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  ஆகியோர் குறித்த இடத்தினை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன்  தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments: