அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு சவால் விடுப்பு - பிமல் ரத்நாயக்க

க.கிஷாந்தன்


அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஊடாக அநுரகுமார திஸாநாயக்கவும் தவறு செய்துள்ளதாக ஒரு கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுக்களால் தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தால்தான் தண்டனை வழங்க முடியும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களுக்கு நாம் ஒன்றை தெளிவாக தெரிவிக்க விருப்புகிறோம். நாம் எப்போதும் பேய்களுக்கு பயப்படுவதில்லை. ஆகவே, நாம் அரசாங்கத்திற் பயமில்லை. அநுரகுமார திருடர்களுக்கு பயமென்றால் அவர்களை திருடர்களென கூறமாட்டார். ராஜபக்சவின் அரசாங்கத்தில் பலர் ஊழல் - மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அறிந்துதான் தகவல்களை வெளியிட்டுள்ளோம்.

ஊழல் எதிர்ப்பு குழுக்கள் என ஊழல்வாதிகளே குழுக்களை அமைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குகின்றனர். அவ்வாறான ஊழில் குழுக்களின் மூலம்தான் பிள்ளையானை விடுதலைச் செய்துள்ளனர். அந்த குழுக்கள் ஊடாகதான் சிபாரிசுகள் வருகின்றன. பல்வேறு ஊழல் - மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்கள்; விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

ஆகவே, நீதிமன்றம் நீதியானதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயார். அதேபோன்று பாராளுமன்றத்திலும், அதற்கும் வெளியிலும் என அனைத்து இடங்களிலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம். முடிந்தால் நீதிமன்றில் குற்றவாளியாக்கி அநுரகுமாரை சிறையில் அடைத்துக்காட்டுங்கள். மக்களின் பணத்தில் ஒருசதத்தைக்கூட கொள்ளையடிக்காதவர். ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார திஸாநாயக்கவால் செய்யப்பட்ட ஒருவிடயத்தை நிரூபித்துக்காட்டுங்கள் என்றார்.

No comments: