ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய நியமனங்கள்


ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி   ஐக்கிய தேசியக் கட்சியின்   புதிய துணைதலைவராக   ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக  முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக   முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் புதிய  பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார  நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்    கட்சியின்  பொருளாளராக  ஏ.எஸ்.எம்.மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்  கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல்  இடம்பெற்றது.


No comments: