சிறைச்சாலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியான கைதிகளின் மொத்த எண்ணிக்கை 4140 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சிறைச்சாலைகளில் தொற்று உறுதியானவர்களில் 4,140 கைதிகளும் 129 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3,777 கைதிகளும் 121 அதிகாரிகளும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 354 கைதிகளும் எட்டு அதிகாரிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: