பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

எஸ்.அஷ்ரப்கான்


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் இன்றைய தினம் (21) நடைபெற்றது.

நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாகவும், ஏனைய திணைக்களங்களுக்கு பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன், நிர்வாக உத்தியோகத்தர் திரு டி.கமலநாதன், பிரதேச செயலாளர் பிரிவு பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு வே.அரவிந்தன் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பயிற்சி ஆசிரியர்களாக 32 பட்டதாரி பயிலுனர்களுக்கும், பாடசாலைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 24 பட்டதாரி பயிலுனர்களுக்கும், ஏனைய திணைக்களங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 33 பட்டதாரி பயிலுனர்களுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: