பொகவந்தலாவ பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ 
பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

அந்தவகையில் டிக்கோயா பீரட் தோட்டத்தில் ஒரே குடும்பத்தில் இருவரும், பொகவந்தலாவ நோத்கோ பகுதியில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பீரட் தோட்டத்தில் இதுவரை 06 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்
தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் அறிக்கை இன்று (04/01/2021) வெளியாகிய போதே மேற்படி மூவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பீரட் தோட்டத்தில் அம்மன் ஆலயத்தின் பூசகர் ஒருவர் உட்பட  12 குடும்பத்தை சேர்ந்த 45 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோட்டம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாவும்,இதுவரையில் இப்பகுதியில் 58 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.



No comments: