திருக்கோவில் விநாயகபுரத்தில் கொள்ளை சம்பவம் - இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

கனகராசா சரவணன்


திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில்  வீடு ஒன்றை உடைத்து தண்ணீர் இறைக்கும் மோட்டார்,  சீனி. அரிசி, இலத்திரணியல் பொருட்கள், மற்றும் சேனை பயிர் செய்கை தோட்டம் ஒன்றில் நீர் இரைக்கும் பம் ஒன்றை திருடிய இருவரையும்  எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வியாழக்கிழமை (31) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 21 விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்றது இதில் வீடு ஒன்றில் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டர். ரிவிடி பிளோயர், அரிசி, சீனி, போன்ற பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

அதேவேளை 28 ம் திகதி விநாயகபுரத்தில் சேனை பயிர் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு பூட்டப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம் திருட்டுப்பட்டுள்ளது இந்த இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து பொலிசாரின் விசாரணையில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரையும். காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உட்பட இருவரையும் புதன்கிழமை கைது செய்ததுடன் திருடப்பட்ட தண்ணீர் இறைக்கும் மோட்டர். மற்றும் நீர் இரைக்கும் பம் என்பவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று வியாழக்கிழமை (31) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: