மலையகத்துக்கான ஒரு புகையிரத சேவை மீள அறிவிக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம்


மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய ஆசன பதிவுகள் ஊடாக பயணிக்கும் குறித்த புகையிரதத்தின் ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரதத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டிய ஆசனங்கள் ஒதுக்கியுள்ளவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே புகையிரதத்தின் ஊடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: