இன்று முதல் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு


கொரோனா தொற்று காரணமாக10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து விமான நிலையங்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுற்றுலாத் துறை சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, குடியுரிமை, இரட்டை குடியுரிமை மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் எந்த வித இடையூறும் இல்லாமல் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான சட்டதிட்டங்கள் தளர்த்தப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்குப் பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments: