கொரோனா தொற்று பரவலை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விசேட திட்டம்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விசேட திட்டத்தில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த விசேட திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி 25 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: