அடையாள அட்டைகளை திருடிய நபர் கைது


சில நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்குகளை திறந்து, அதனூடாக இணையத்தளத்தில் பொருட்கள் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனை செய்த பொருட்களின் பெறுமதியில் ஒரு பகுதியை வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பின்னர் சந்தேகநபர் குறித்த பணத்தினை பெற்றுக் கொண்டு வங்கிக் கணக்கினை செயலிழக்கச் செய்யவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 29 வயதுடைய நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: