தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் மோதர பொலிஷ் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் வாழைத்தோட்டம் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், பொரள்ள பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த (பிடகோட்டோ) கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடவத்த கிராம சேவகர் பிரிவு, மீகஹவத்த கிராம சேவகர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவின் ரோஹண விகார மாவத்த, பேலியகொட கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments: