68 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பு


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள 68 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பாடி, வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே  தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் பெப்பிரவரி மாதம் முதல் 137 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரத்து 470 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் 9ம் திகதிக்குள் ஆயிரத்து 400 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: