ஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவர்கள் என 53 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எல் மெதவெல்ல தெரிவித்தார்.
தரம் 10 இல் கல்வி பயிலும் அட்டன் நகரப்பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கு இன்று (15) வெளியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் தந்தை கொழும்பிலிருந்து வந்த போது கினிகத்தேனை கலுகல சோதனைச்சாவடியில் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோனையில் தொற்று உறுதியானதை தொடர்ந்து,அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில்,அவரது மகனான குறித்த மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவன் கடந்த 07 ஆம் 08 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: