தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நாவலப்பிட்டி நகரில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றிய 
05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த
காப்புறுதி நிறுவனம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக  பஸ்பாகே கோரளை
சுகாதார பரிசோதகர் என்.எஸ்.கே.விக்ரமகே தெரிவித்துள்ளார்.

09.01.2021.சனிகிழமை இரவு வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த
05 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிவந்த 50 பேர் 14 நாட்களுக்கு  சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி, வெலிகம்பள, கொலபத்தன,கெட்டப்புள்ளா,கம்புக்பிட்டிய,ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

மேலும்,தொற்றுக்குள்ளானவர்களில் ஒருவர் நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளதால் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மற்றுமொரு நபர் நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளதனால், இவரோடு தொடர்பினை பேணிவந்த அனைவரையும் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்,தொற்றுக்குள்ளான 05 பேரையும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

No comments: