நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்


கொரோனா தொற்று காரணமாக மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,பேருவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானது மற்றும் புற்றுநோய் காரணமாக 2021 ஜனவரி 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,தெரணியகல பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானது மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையால் 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,வரகாகொட பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானது மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையால் 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும்,கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: