நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 463 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 463 பேருக்கு இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை, இன்று ஆரம்பிமாகியுள்ளது.

இந்த நிலையிலேயே, சபாநாயகர் உள்ளிட்ட 463 பேருக்கு இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, 15 அமைச்சர்களுக்கும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தின் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் இரண்டாவது கட்டம், நாளை மறுதினமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, காலை 9.00 மணி முதல் மதியம் 12 மணிவரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிரி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: