இன்றைய தினம் 32,000 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


நாட்டில் இன்று இரவு 7.30 மணி வரை நாடு பூராகவும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: