நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 300 ஐக் கடந்தது


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐக் கடந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டு பேர் உயிரிழந்த நிலையிலேயே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழ்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ பகுதியைச்சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் இரணவில சிகிச்சை மத்திய நிலையத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 27ம் திகதி கொரோனா நியுமோனியா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா நிமோனியா காரணமாக கடந்த 27ம் திகதி  உயிரிழந்துள்ளார்.

அத்துடன் காலி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 28ம் திகதி கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் கடும் இருதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், களுத்துறை பகுதியைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா காரணமாக கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவ பகுதியைச்சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதி அமுக்கம் காரணமாக கடந்த 28ம் திகதி  உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பிலியந்தலை பகுதியைச்சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் கொத்தாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா தாக்கம் காரணமாக கடந்த 29ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சாய்ந்த மருது – 12 பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ம் திகதி கொரோனா நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா மற்றும் இருதய நோய் காரணமாக கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

No comments: