நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி, மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி, களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் இரத்தம் விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
No comments: