மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த 7 பேரும்,ஓட்டமாவடி,கோரளைப்பற்று மத்தி,களவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா 4 பேரும் மட்டக்களப்பு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளானவர் ஒலுவிலைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் ஆவார்.

எனவே அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 75 பேருக்கு என்டிஜன்ட் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 250 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.No comments: