மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் - 19 பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்


நாளைய தினம் போயா விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் - 19 பரிசோதனை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரி டமும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமை யினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: