வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்


வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 26 ம் திகதி முதல் புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

புதிய முறைமையின் கீழ்,

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளர்கள், குறுகிய கால விசாக்களை உடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் நாடு திரும்புவதற்காக விசேட விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, இலங்கை அரசாங்கத்தினால் இந்த விமான சேவைகள் ஒழுங்குசெய்யப்படவுள்ளன.

எவ்வாறாயினும், இலங்கையர்கள் அல்லது நீண்ட கால குடியுரிமை பெற்றவர்களாயின், பெயர் குறிப்பிடப்பட்ட ஹோட்டல்களில் பணம் செலுத்தி கண்காணிப்பில் இருப்பதற்கான முறையின் கீழ் வணிக அல்லது நாடு திரும்பவுதற்காக ஒதுக்கப்பட்ட விமானங்களை தவிர்ந்த ஏனைய விமான சேவைகள் ஊடாக நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படும் என வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments: