புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட கண்காணிப்பு நடவடிக்கை


புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதன்படி, இன்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதியின்றி வீடுகளில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுபவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு  கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: