நேற்றைய தினம் மேல் மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 662 பேரில் 502 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதில் கொழும்பு மாவட்டத்தில் 259 பேர், களுத்துறை மாவட்டத்தில் 164 பேர் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 79 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 46 பேர் , மாத்தறை மாவட்டத்தில் 26 பேர், காலி மாவட்டத்தில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: