நேற்றைய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 643 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 309 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 119 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 104 பேரும், காலி மாவட்டத்தில் 28 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் கிராண்பாஸ் பகுதியில் 69 பேரும், மட்டக்குளிய பகுதியில் 62 பேரும், மருதானை பகுதியில் 25 பேரும், பொரளையில் 24 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெள்ளவத்தையில் 19 பேரும், கிருலப்பனையில் 14 பேரும், தெமட்டகொடையில் 11 பேரும், புளூமெணடல் பகுதியில் 13 பேரும் நேற்றைய நாளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், கொரோனா தொற்றின் 2 ஆவது அலையில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 104 பேர் நேற்றைய தினம் அடையாம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, மஹர பகுதியில் 68 பேரும், சீதுவ பகுதியில் 7 பேரும், வத்தளை பகுதியில் 6 பேரும் கம்பஹா மற்றும் களனி ஆகிய பகுதிகளிலிருந்து தலா 4 பேர் வீதம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 15 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேரும், குருணாகலை மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 8 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 4 பேரும், நுவரெலியா, கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா இருவரும், நேற்றைய நாளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: